×

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் நெடுங்குன்றம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பு  வழங்கும் விழா நேற்று நடந்தது. நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா சீனிவாசன் தலைமை தாங்கினார். துணை தலைவர் விஜயலட்சுமி சூர்யா முன்னிலை வகித்தார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன் கலந்துகொண்டு, அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பைகளை, 7 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார். இதில், ஒன்றிய கவுன்சிலர் நேதாஜி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோ.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.திருப்போரூர்: திருப்போரூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் திருப்போரூர், நெம்மேலி, சூளேரிக்காடு, கண்ணகப்பட்டு, காலவாக்கம் ஆகிய இடங்களில் 11 கூட்டுறவு கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகளில் உள்ள 8,326 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்த 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு பை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். எம்பி செல்வம், எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன் ஆகியோர் தலைமை தாங்கி 8,326 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் இலவச தொகுப்பு பைகளை வழங்கினர்.நிகழ்ச்சியில் திருப்போரூர் நகர திமுக செயலாளர் தேவராஜ், நகர திமுக நிர்வாகிகள் சந்திரன், ரவி, பரசுராமன், மோகன், பலராமன், பாலு, கோபி கிருஷ்ணன், பாபு, பரணிதரன், அன்பழகன், வீரராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் கிராமத்தில் 693 குடும்ப அட்டைதாரர்களுக்கு  21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நியாயவிலை கடை முன்பு நடந்தது. தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமை தாங்கினார். வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன்,  ஒன்றியக்குழு துணை  தலைவர் சேகர் ஆகியோர் கலந்துகொண்டு ஊராட்சியில் உள்ள 693 குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருள் அடங்கிய தமிழக அரசின் பொங்கல் தொகுப்பை பைகளை வழங்கி சிறப்புரையாற்றினர். இதில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோவிந்தராஜன், தேவரியம்பாக்கம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் வெங்கடேசன், செயலாளர் புஷ்பலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு appeared first on Dinakaran.

Tags : Guduvanchery ,Pongal collection presentation ,Tamil Nadu government ,Nedungunram Panchayat ,Kattangolathur Union ,Nedunkunram… ,
× RELATED கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்...